திருமணத்தை இழக்க விரும்பாமல்... சினிமாவை விட்டுக் கொடுத்த நஸ்ரியா!
பஹத் பாசிலை இழக்க விரும்பாமல் தான் சினிமாவிலிருந்து விலகி, குறைந்த வயதிலேயே திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார் நஸ்ரியா. நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. துறு துறு கண்கள், திறமையான நடிப்பு என குறுகிய காலத்திலேயே தமிழில், திருமணம் என்னும் நிக்காஹ், நய்யாண்டி, ராஜா ராணி, வாயை மூடி பேசவும் என பல படங்களில் நடித்தார். தமிழில் முன்னணி நாயகியாக ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென, கடந்த 2014ம் ஆண்டு பஹத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் நஸ்ரியா.



