Breaking News

அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பாக சிவில் மற்றும் அரச சார்பற்ற நிருவனங்ககளின் மூன்றாவது கலந்துரையாடல்

(லியோ )
அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பாக  மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் இணையத்துடன் இணைந்து  கடந்த சில நாட்களாக செயல்படுத்தப்பட்ட மக்களின் கருத்து கணிப்பு தொடர்பான இறுதி கலந்துரையாடல் எகெட் கரித்தாஸ் நிறுவன அனுசரணையில்  மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது .

தற்போது பேசப்படுகின்ற புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் சம்பந்தனான மட்டக்களப்பு மாவட்ட சிவில் மற்றும் அரச சார்பற்ற நிருவனங்ககளின் சிபாரிசுகள் பற்றிய மூன்றாவது கலந்துரையாடல்  இன்று இடம்பெற்ற நிகழ்வில் சுமார் 80 அரச சார்பற்ற  பிரதிநிதிகள் பங்கு பற்றி உள்ளீடுகள் வழங்கப்பட்டன .

இந்நிகழ்வில் பெபரெல் அமைப்பை சேர்ந்த  எம் . ரிசாட் , எப் . ஸ்டான்லி ஆகியோர் வளவாலர்களாக  கலந்துகொண்டனர் .

அரசாங்கத்தினால்  ஏற்கனவே வெளியிடப்பட்ட  20 ஆலோசனைகளை முன்வைத்து இன்றைய கலந்துரையாடல்கள் மற்றும் குழு வேலைகள் இடம்பெற்றன .  இதில் முக்கிய  விடயங்களான 1 அடிப்படை உரிமைகள் ,2 ஆட்சி முறை ,3 நீதித்துறை, 4 தேர்தல் முறைமை .5 அதிகார  பகிர்வு, 6 இனம், மதம் ,  மொழி  போன்றவை பேசப்பட்டன .

இன்று கலந்துரையாடப்பட்ட   தொகுப்புகள்  எதிர் வரும் 25 ஆம்  26ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள யாப்பு சீர்திருத்த குழு கூட்டத்தில் சமர்பிக்கப்படவுள்ளன .

இன்று இடம்பெற்ற நிகழ்வு மட்டக்களப்பு எகெட் கரிதாஸ் நிறுவன இணைப்பாளர் அருட்பணி ஜெரோம் டிலிமா தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற பிரதிநிகளும் , கொழும்பு பெபரல் அமைப்பு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் .