விபத்தில் படுகாயமடைந்தவரின் உடலிலிருந்து வெளியேறும் ஆன்மா ?
21-ம் நூற்றாண்டில் இந்த உலகை கையில் அடக்கும் அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி விண்ணைத் தொட்டுள்ளது. ஆனாலும் பல நூற்றாண்டுகளாக எழுப்பப்படும் சில கேள்விகளுக்கு மட்டும் விடைக்கொடுக்க முடியாமல் நமது தொழில்நுட்பமும் வளர்ந்து கொண்டே வருகிறது.
அப்படி எழுப்பப்படும் கேள்விகளில் ஒன்று, நாம் இறந்த பிறகு நடப்பது என்ன? என்பது தான்.
இந்த கேள்வியைக் கேட்க நினைப்பவர்களுக்காக, அமெரிக்காவில் கெண்டகி மாநிலத்தை சேர்ந்த, சால் வாஸ்க்வெஸ் என்ற லாரி டிரைவர் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தவரை, ஆம்புலன்சில் ஏற்றும் போது அவரது உடலின் சற்று மேல் பகுதியில் ஒரு மங்கலான உருவம் மிதப்பது போல் இந்த புகைப்படத்தில் பதிவாகி உள்ளது.
ஒருவரின் உடலில் இருந்து ஆன்மா வெளியேறுவது போன்று தோன்றும் இந்த புகைப்படத்தை, இதுபற்றி நம்பிக்கை கொண்ட ஆயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.



