அமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே !
புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு அமெரிக்கா உட்பட வெளிநாட்டு மருத்துவர்கலினால் மருதத்துவப் பரிசோதனை நடாத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், அவ்வாறான மருத்துவப் பரிசோதனை தேவையா இல்லையா என்பது குறித்த இறுதித்தீர்மானத்தை அரசாங்கமே தீர்மானிக்கும் என்றும் அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று (17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜித மேற்குறித்தவாறு தெரிவித்தார். முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்வதற்கு அமெரிக்கா தயாராக உள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் இடம்பெற்ற வட மாகாண சபை அமர்வில் தெரிவித்திருந்தமை. குறிப்பிடத்தக்கது.