விஜய்யின் புலியை தவறவிட்டார் பாவனா
விஜய்யின் புலியை தவறவிட்ட பாவனா
சித்திரம் பேசுதடியில் அறிமுகமான பாவனாவுக்கு தமிழ் சினிமா ராசியாக அமையவில்லை. தெலுங்கும் அப்படியே. தடுமாறிக் கொண்டிருந்த அவருக்கு ஆதரவு தந்தது மலையாளமும், கன்னடமும். அதிலும் கன்னடத்தில் பல ஆண்டுகள் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படத்தில் நடிக்க பாவனாவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. அந்த நேரம் அவர் ஷ்யாம் பிரசாத்தின் இவிடே படத்துக்கு கால்ஷீட் தந்திருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை.
தமிழில் விஜய் படத்துடன் ரீ என்ட்ரியாகும் வாய்ப்பு பறிபோன வருத்தத்தில் இருக்கிறார் பாவனா.



