Breaking News

விபத்துகளைத் தடுக்க உதவும் தகவல் கண்ணாடி!!!

கார் ஓட்டும்போது, எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறோம், பெட்ரோல் எவ்வளவு இருக்கிறது என்ற விவரங்களை டேஷ்போர்டில் உள்ள மீட்டர்களைப் பார்த்துத்தானே தெரிந்துகொள்ள முடியும். அமெரிக்க நிறுவனம் கண்டுபிடித்துள்ள மினி அங்மென்டடு விசன் என்ற கண்ணாடியை அணிந்துகொண்டால் எந்த மீட்டரையும் பார்க்க வேண்டியதில்லை. மகிழுந்தின் - கார் முன்புறக் கண்ணாடியில் எவ்வளவு வேகத்தில் செல்கிறோம், முன்னால் செல்லும் வாகனங்கள் எவ்வளவு தூரத்தில் செல்கின்றன என்பதுடன் நெருங்கிச் சென்றால் எவ்வளவு அருகில் சென்றுள்ளோம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மேலும், மகிழுந்துக்கு வெளியே (அருகில்) ஏதாவது பொருள் இருந்தாலோ, சாலைத் தடுப்புகள் இருந்தாலோ வெளியிலும் பார்க்க முடியும். இதனால், விபத்துகள் பெருமளவில் குறையும் வாய்ப்பு உள்ளது