Breaking News

வேட்புமனுவில் கையெழுத்திடாது திரும்பினார் சுதர்சனி பெர்ணாண்டோபுள்ளே

சுதர்சனி பெர்ணாண்டோபுள்ளே இன்று (12) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்புமனுவில் கையெழுத்திடாது திரும்பினார்.

விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர் ஒருவருக்கும் திஸ்ஸ விதாரணவின் கட்சி வேட்பாளர் ஒருவருக்கும் பெர்ணாண்டோபுள்ளேயின் தொகுதியில் இடம் கொடுப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே வேட்புமனுவில் கையெழுத்திடாது திரும்பியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உறுமயவின் வேட்பாளர் ஒருவருக்கும் பெர்ணாண்டோபுள்ளேயின் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பு மனுவில் இடமளிப்பதற்கு ஆயத்தம் செய்யப்பட்ட போதிலும் பெர்ணாண்டோபுள்ளே எதிர்ப்பு காரணமாக அது கைவிடப்பட்டது.

இது சம்பந்தமாக பெர்ணாண்டோபுள்ளேயிடம் வினவியபோது தொகுதியில் பிரச்சினை இருப்பதன் காரணமாக தான் இதுவரை வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை எனத் தெரிவித்தார்.  
நமது நிருபர்