Breaking News

மஹிந்த புதிய கட்சியொன்றின் மூலம் தேர்தலில் போட்டி ?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தவிர்ந்த வேறொரு கட்சியொன்றில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தயார் செய்து வருவதாக நம்பகமான அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.  

முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதி ஆகியோரின் தரப்பைச் சேர்ந்தோர் ஒரே பட்டியலில் போட்டியிடுவது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ராஜபக்ஷ தரப்பினர் தெரிவிக்கின்றனர். 

ஒரே பட்டியலில் போட்டியிடுவதாயின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்டோருக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இடமளிக்கக் கூடாது என ஜனாதிபதியின் தரப்பினரால் நிபந்தனை முன்வைக்கப்பட்டதாகவும் அதற்கு முன்னாள் ஜனாதிபதி தரப்பினரால் மறுப்புத் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த பேச்சாளர் தெரிவித்தார்

அதற்கமைவாக வேறு பட்டியலில் போட்டியிடுவதற்கு நூற்றுக்கு எண்பது வீதம் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நமது நிருபர்