5 பவுலர்களை வைத்து ஆடியதில் தவறில்லை..
பவுலர்களை வைத்து ஆடப் போகிறேன் என்று கூறிய பிறகு எனது உத்தியை மாற்றுவது சரியாக இருக்காது. 6 பேட்ஸ்மேன்களுடன் நாங்கள் அருமையாக ஆடியிருக்க முடியும். அதை நாங்கள் செய்யவில்லை. அதுதான் தவறு என்று முதல் டெஸ்ட் தோல்விக்குக் காரணம் கூறியுள்ளார் கேப்டன் விராத் கோஹ்லி. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் இந்தியா தோல்வியைத் தழுவி விட்டது. இத்தனைக்கும் முதலில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் கையே வலுவாக ஓங்கியிருந்தது. ஆனால் 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கில் இந்திய வீரர்கள் சொதப்பி விட்டனர். மேலும் இலங்கை வீரர் ஹெராத்தும் அபாரமாக பந்து வீசி இந்திய அணியை நிலைகுலைய வைத்து விட்டார். இதற்கிடையே, கோஹ்லி, 5 பவுலர்களை வைத்து ஆடியது தவறு என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு போட்டி முடிவில் விளக்கம் அளித்தார் கோஹ்லி. அவரது பேட்டியிலிருந்து பேட்ஸ்மேன்கள் மீதுதான் தவறு எங்களது பந்து வீச்சாளர்கள் தவறு செய்யவில்லை. அவர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். பேட்ஸ்மேன்கள் மீதுதான் தவறு. அவர்கள் சரியாக ஆடவில்லை. பொறுப்பை உணர்ந்து ஆடவில்லை.



