Breaking News

வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலையிறவு பாலத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலையிறவு பாலத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் . இதனால் இன்று காலை இப்பகுதி  பொதுமக்கள் பாலத்தினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . விபத்து தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொண்டுள்ளதாக தெரிவித்தே பொதுமக்கள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டனர் .

இன்று காலை 7.00மணியளவில் மட்டக்களப்புக்கு வேலைக்கு சென்றகொண்டிருந்த கன்னன்குடாவை சேர்ந்த 27வயதுடைய கே.சுதாகரன் என்ற இளைஞனை மண் ஏற்றிவந்துகொண்டிருந்த கன்டர் வாகனம் மோதியுள்ளது. இதன்போது இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் உடனயாக விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தினை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர்.

எனினும் உரிய விசாரணையினை மேற்கொள்ளாமல் பொலிஸார் வாகனத்தினை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றதாக தெரிவித்து பொதுமக்கள் வலையிறவு பாலத்தினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கு நீதி கிடைக்கும் வரை போக்குவரத்துக்கு வழிவிடமாட்டோம் என்று தெரிவித்;து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேநேரம் சம்பவ இடத்துக்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,அமல் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோர் சம்பவம் தொடர்பில் பொதுமக்களிடம் கேட்டறிந்துகொண்டதுடன் பொலிஸாருடனனும் கலந்துரையாடினர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் .