தேர்தல் முறைப்பாடுகளுக்கென பொலிஸுக்கு புதிய முறைப்பாட்டுப் புத்தகம்
ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் தேர்தல் தொடர்பிலான முறைபாடுகளை பதிவுசெய்து கொள்வதற்காக தேர்தல் முறைபாட்டு தகவல்கள் புத்தகத்தை பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சகல பொலிஸ் நிலைங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் கட்டளையிட்டுள்ளார். பொலிஸ் தேர்தல் செயலக காரியாலயம் எனும் பெயரில் பயன்படுத்தப்படும் அந்த புத்தகத்தை மிகவும் கவனமாக கையாளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை பாதுகாப்பாக கையாளுமாறும், தேர்தல் வழக்குகள் நிறைவடையும் வரையிலும் பூட்டுப்போட்டு அந்த பூட்டின் சாவியை தம்வசம் வைத்துக்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் தொடர்பிலான பொறுப்பை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தனிப்பட்ட ரீதியில் வைத்துகொள்ளவேண்டும் என்றும், யாராவது இடமாற்றம் பெற்றுச்சென்றால், அந்தப்பவியை புதிதாக பொறுப்பேற்கின்ற அதிகாரியிடம் அதனை ஒப்படைக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.



