எதிர்கட்சித் தலைவர் பதவி வேண்டாம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு தலைமை வகிக்கத் தயார் மஹிந்த ராஜபக்ஷ.
எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தாம் தயார் இல்லை என குருநாகல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் சாதாரண உறுப்பினராக செயற்பட தாம் விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தேவை ஏற்பட்டால் தேசிய பாதுகாப்புக்கு தலைமைத்துவம் வகிக்கத் தான் தயார் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.