தாஜூதீனின் உடலம் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு மரணம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை.
பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதீன் மரணம் தொடர்பில் விசாரணைகள் முன் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் பேச்சாளரின் தகவல்படி, தாஜூதீன் இறந்து கிடந்ததாக கூறப்படும் வாகனம் தொடர்பில் இந்த விசாரணைகள் முன் எடுக்கப்பட்டதாகவும், அத்தருணத்தில் அரசாங்க ரசாயான பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள், குறித்த வாகன உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தின் பொறியிலாளர், மோட்டார் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் சமுகமளித்திருந்தனர்.
இதன்போது வாகனம் விபத்துக்கு உள்ளானதாக கூறப்பட்ட இடத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது . இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தோண்டி எடுக்கப்பட்ட தாஜூதீனின் உடலம் தொடர்ந்தும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.