ஒசாமா பின்லேடன் மகன் களத்தில்…..
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், லண்டன், பாரீஸ் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்துமாறு அல் கொய்தா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவால் தீவிரமாக தேடப்பட்ட தீவிரவாதி ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள அப்போத்பாத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தன் பேரில் ஒசாமா பின் லேடன் பதுங்கி தங்கியிருந்த வீட்டினுள் அமெரிக்க படைவீரர்கள் அதிரடியாக நுழைந்து ஒசாமா பின் லேடனை சுட்டுகொன்றனர். இந்நிலையில் ஒசமா பின்லேடன் மகன் ஹம்சா பின் லேடன் ஆடியோ மூலம் அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இணையளத்தில் வெளியாகி உள்ளது. அதனை அல் கொய்தா தீவிரவாதிகள் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். டுவிட்டரில் அல் கொய்தா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் கூறியிருப்பதாவது: காபூல், பாக்தாத், மற்றும் காசாவில் உள்ள அல் கொய்தா உறுப்பினர்களை சேர்ந்த தீவிரவாதிகள் வாஷிங்டன், லண்டன், பாரீஸ் மற்றும் டெல் அவிங் ஆகிய நகரங்கள் மீது புனித போர் நடத்த வேண்டும் என்று தீவிரவாதிகளை ஹம்சா பின் லேடன் கேட்டுகொண்டுள்ளதாக டுவிட்டரில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அல் கொய்தா தீவிரவாதிகள் கூறியிருப்பது அமெரிக்கா மற்றும் லண்டனில் வசிக்கும் மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



