ரோபோக்களுடனான பாலியல் உறவு...
மனிதர்களும் ரோபோக்களும் பாலியல் உறவில் ஈடுபடும் வழக்கம் அடுத்த 50 ஆண்டுகளில் ஏற்பட்டுவிடும் என பிரிட்டனைச் சேர்ந்த பாலியல் உளவியல் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். பிரிட்டனி சண்டர்லண்ட் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றும் கலாநிதி ஹெலன் ட்ரிஸ்கொல் என்பவரே இக்கருத்தை தெரிவித்துள்ளார். "செக்ஸ் டெக்" என்பது வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே 2070 ஆம் ஆண்டளவில் மனித - மனித உறவுகள் மிக குறைந்துவிடலாம் என அவர் கூறியுள்ளார். எதிர்வரும் சில வருடங்களில் பாலியல் தொழிற்துறைக்கு ரோபோக்களின் முக்கியத்துவம் வேகமாக அதிகரித்துவிடும், இதனால், அதிக உணர்வுள்ள ரோபோக்கள் தயாரிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். "தற்போதைய பாலியல் வழக்கங்களை 100 வருடத்துக்கு முந்தைய நிலைமையுடன் ஒப்பிட்டால் அவை பெரும் மாற்றங்களுக்குள்ளாகியிருப்பதை நாம் உணரலாம்" என அவர் கூறுகிறார். எனினும், ரோபோ இயந்திரங்களுடனான பாலியல் உறவு முறை பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம். இயந்திரங்களுடனான பாலியல் உறவை முறையற்றதாகவும் துரோகமானதாகவும் சிலர் கருதலாம்" என கலாநிதி ஹெலன் ரிஸ்கொல் கூறியுள்ளார்.



