Breaking News

மட்டக்களப்பு காத்தான்குடியில் இரு ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

மட்டக்களப்பு, காத்தான்குடியில் திங்கட்கிழமை கட்சியொன்றின் ஆதரவாளர்கள் இருவர் தாக்குதலுக்குள்ளான நிலையில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த ஆதரவாளர்கள் தாக்குதலுக்குள்ளானமை தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்குள்ளான இருவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.