Breaking News

நாயைக் காப்பாற்றுவதற்காக விமானத்தை திசை திருப்பிய ஏர் கனடா விமானி


விமானத்தில் இருக்கும் நாயைக் காப்பாற்றுவதற்காக அந்த விமானத்தையே திசை திருப்பிய விமானியை பிராணிகள் நல ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இஸ்ரேலில் இருந்து கனடாவின் ரொறன்ரோ நகருக்கு 200 பயணிகளுடன் ஏர் கனடா விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் நிலவிய அதிகபட்ச குளிரால் அந்த விமானத்தில் இருந்த புல்டாக் இனத்தைச் சேர்ந்த 4 வயது நாயான சிம்பாவின் உடல் நடுங்கத் தொடங்கியது. விமானத்தில் இருக்கும் வெப்பமூட்டும் அமைப்பு செயல்படாததால் நாயின் நிலை மோசமானது. இந்த விவகாரம் பைலட்டிற்கு தெரிய வந்தது. உடனடியாக அந்த பைலட் விமானத்தை ஜெர்மனிக்கு திசை திருப்பி அந்த நாயை வேறொரு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார். விமானியின் இந்த செய்கையால் விமானம் 1 மணி நேரம் தாமதமானது. இருப்பினும் பெரும்பாலான பயணிகள் கோபப்படாமல் விமானி செய்த நல்ல காரியத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டனர். இந்த நாயின் உரிமையாளரோ என் நாய் எனக்கு குழந்தை மாதிரி, அதை குளிரிலிருந்து காப்பாற்றிய விமானிக்கு நன்றியோ நன்றி என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.