Breaking News

அநாகரிக ஆணுறை விளம்பரங்களுக்கு பாக்கிஸ்தானில் தடை

எம்.ஐ.அப்துல் நஸார்

திங்களன்று பாக்கிஸ்தானின் ஊடகக் ஒழுங்கமைப்பு ஒரு வியாபா நிறுவத்தின்  ஆணுறை விளம்பத்தினை, அது ஒழுக்கக் கேடானதாகவும், மத நெறிகளுக்குப் புறம்பானதுமாக இருப்பதாக மக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்தததையடுத்து அந்த விளம்பரத்திற்கு தடை செய்துள்ளது. 

சுமார் 200 மில்லியன் முஸ்லிம் மக்களைக் கொண்ட சமூக ரீதியில் பழைமைபேணும் ஒரு நாடான பாக்கிஸ்தான். பாலியல் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு விடயங்கள் என வரும்போது அவற்றை தடுக்கப்பட்ட விடயங்களாகக் கருதிதி அதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. 

ஜோஷ் என்ற ஆணுறை நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முன்னணி மொடல் ஒருவரைப் பயன்படுத்தி  நகைச்சுவையுடன் கூடிய இவ்வாறான விளம்பரமொன்றை ஒளிபரப்பியமகை;காக அந்த நிறுவனம் தடைக்குள்ளாகியது. 
குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான அநாகரிகமான கண்டிக்கத்தக்க ஒளிபரப்பு சம்பந்தமாக ஏராளமான முறைப்பாடுகள் அதிகாரசபைக்கு கிடைத்ததாக பாக்கிஸ்தானின் இலத்திரனியல் ஊடக ஒழுங்கமைப்பு அதிகாரசபையின் பேச்சாளரான பக்ருத்தீன் முக்ஹால் தெரிவித்தார். 

உத்தரவு குறித்த விளம்பரம் பொதுவாக அநாகரீகமானது, ஒழுக்கக்கேடானது என்பதோடு எமது சமூக-கலாச்சார மற்றும் மத நெறிகளை அலட்சியம் செய்கிறது எனவும் பாக்கிஸ்தானின் இலத்திரனியல் ஊடக ஒழுங்கமைப்பு அதிகார சபை சுட்டிக் காட்டியுள்ளது.

குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமாக வெளிப்படையாகப் பேசுவது பழைமைவாத பாக்கிஸ்தானின் இஸ்லாமிய சமூகத்தில் தடுக்கப்பட்ட ஒன்றாக காணப்படும் அதேவேளை பாக்கிஸ்தானின் சனத்தொகை வேகமாக அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

ஐக்கிய நாடுகள் சபையின் கருத்துப்படி, பாக்கிஸ்தானின் சனத்தொகை ஒரு ஆண்டிற்கு இரண்டு வீதத்தால் அதிகரித்து கொண்டு செல்லும் நிலையிலும் பாக்கிஸ்தானின் சனத்தொகையில் மூன்றிலொரு பகுதியினருக்கு குடும்பக் கட்டுப்பாட்டிற்கான வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.