Breaking News

மட்டக்களப்பு விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கட்புலக் கலைகளின் கண்காட்சி இன்று ஆரம்பம்.

கிழக்கு ப பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் கட்புலத் தொழிநுட்பக் கலைத்துறையினரின் ஏற்பாட்டில்   “ வண்ணமும் வடிவும் “ எனும் தொனியில்  கட்புலக் கலைகளின் கண்காட்சி மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இன்று ஆரம்பமானது  .

இசை, நடனத் துறைகளை மற்றும் கற்பிக்கும் நிறுவகமாக விளங்கிய கிழக்கு ப பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட கட்புலத் துறையினரால் சித்திரம் ,சிற்பம் ,அலங்காரம் வடிவமைப்புக்கள் ,புத்துருவாக்கப் படைப்புகள் ,வர்ண கலை முதலிய பாடங்களை நடைமுறைப் படுத்தப்பட்டு தற்போது கிழக்கிலங்கையின் ஒரே நிறுவகமாக  மட்டக்களப்பு கல்லடி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் விளங்குகின்றது .

இதனை சமூகத்திற்கு அறியப்படுத்தும் முகமாக மூன்று நாட்கள் பிரமாண்டமாக இக்கண்காட்சி நடத்தப்படுகின்றது .

இக்கண்காட்சியானது 16, 17, 18 ஆகிய மூன்று தினங்கள்  காலை  09.00 மணி முதல் மாலை  05.00 மணி வரை இடம்பெறவுள்ளது . 

கண்காட்சியின் ஆரம்ப நாளான இன்று நிறுவக விரிவுரையாளர்கள் , கற்கைகள் நிறுவகத்தின்  மாணவர்கள் , மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்  .
( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர் )