மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வி கல்லூரி ஆசிரிய மாணவர்கள் 25 பேர் உணவு ஒவ்வாமையினால் திடீர் சுகயீனமுற்று ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வி கல்லூரி ஆசிரிய மாணவர்கள் 25 பேர் உணவு ஒவ்வாமையினால் திடீர் சுகயீனமுற்று ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
( அமிர்தகழி நிருபர் )
மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வி கல்;லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் 25 பேர் உணவு ஒவ்வாமையினால் திடீர் சுகயீனமுற்று ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் 19.9.2015, 8 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இக்கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் நேற்று முன்தினமிரவு(வெள்ளிக்கிழமை இரவு) உணவை உட்கொண்டுள்ளனர் அதன் பின்னரே இவர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல், வாந்தி, மயக்கம், தலைசுற்று,வயிற்றோட்டம் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டே இம்மாணவர்கள் வைத்தியசாலைக்கு வந்துள்ளதாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
21 பெண் ஆசிரியமாணவிகளும், 4 ஆண் ஆசிரிய மணவர்களுமே இவ்வாறு திடீர் சுகயீனமுற்றுள்ளனர்.
இந்த மாணவர்கள் நேற்று சனிக்கிழமை காலையிலேயே திடீர் சுகயீனமுற்ற போதிலும் அம்மாணவர்கள் நேற்றிரவு 8மணிக்குப்பின்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


