Breaking News

மஹிந்த ராஜபக்ஷ அநியாயம் செய்திருந்தால் நடவடிக்கை

யுத்தக் காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பிலான நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரை பின்பற்றியவர்கள் அந்த நீதிமன்றத்தின் முன்னால் சாட்சியளிக்கவேண்டும் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி, கட்டளையிடும் அதிகாரி மற்றும் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட யாரோ அநியாயம் செய்திருந்தால் அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

என்னுடைய அனுபவத்தின் பிரகாரம் யுத்தம் ஒரு குற்றமாகும். அதன் பிரகாரம் யுத்தத்துக்காக யாராவது ஒருவர் கட்டளையிட்டிருந்தால் அவரிடம் விசாரிக்கவேண்டும் என்பதுடன் எங்களுடைய அரசாங்கம் அவ்வாறு செயற்பட்டிருந்தால் அது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனால் வெளியிடப்பட்டுள்ள இலங்கை குறித்த விசாரணை அறிக்கை குறித்து பிபிசி சந்தேசய கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு சர்வத்தே தரத்திலான மட்டத்தில் தேசிய பொறிமுறையின் பிரகாரம் விசாரணையை முன்னெடுப்பதாகும்.
நாடு என்றவகையில் சர்வதேச விசாரணைக்கு இணங்குவதற்கு நாங்கள் தயாரில்லை. எனினும், சர்வதேச தரத்திலான தேசிய விசாரணைக்கு நாங்கள் தயார்.

சர்வதேச மட்டத்திலான விசாரணைக்கு வெளிநாட்டு நிபுணர்களின் பங்குபற்றலுக்கு இருக்கின்ற சந்தர்ப்பத்துக்கு நாங்கள் தயாரில்லை என்றார்.
கடந்த அரசாங்கம் சர்வதேச பிரதிநிதி பங்குபற்றினார். அதனால் அது பிரச்சினை இல்லை என்றும் தெரிவித்தார்.