எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.
எதிர்வரும் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில், கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்கவுள்ளதாகவும் தேசிய உற்பத்தியில் 6% சதவீதமான நிதியை கல்விக்காக ஒதுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதியினுள் பாடசாலை மாணவர்களுக்கு அதிகளவில் புதிய புத்தங்களை வழங்க எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஆரம்பமான சர்வதேச புத்தக கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை புத்தக வெளியீட்டாளர்களின் சங்கம் 16 வது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள இந்த புத்தக கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.



