றோவுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை மலின் ஜயதிலக்க.
இந்திய உயஸ்தானிகர் காரியாலயம் மற்றும் றோ முகவர் நிறுவனத்துடன் தனக்கு தொடர்பில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மலின் ஜயதிலக்க தெரிவித்தார்.
ராஜகிரியவில் உள்ள அரசியல் பீட கேட்போர் கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம் மற்றும் றோ முகவர் நிறுவனத்துடன் என்னை தொடர்புபடுத்தி பேராசிரியர் நலிந்த சில்வா கூறியிருந்தமை அடிப்படையற்றதாகும். பொய்யான தகவல்களை அடிப்படையாக வைத்து என்மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தியமையால் என் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு நட்டஈடுகோரி நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளேன். அவ்வாறு எனக்கு தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புறுமையில் இருந்து நான், இராஜினாமா செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.