அதிநவீன தொழில்நுட்பத்தை மிஞ்சும் முன்னோர்களின் சுனாமி எச்சரிக்கை கல்
ஜப்பானில் சுனாமியிலிருந்து தங்கள் சந்ததிகளை பாதுகாக்க ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே குறிப்பு பதிவை விட்டுச் சென்றுள்ளனர் முன்னோர்கள். ஜப்பானிய முன்னோர்கள் அடிக்கடி அங்கு ஏற்படும் சுனாமியிலிருந்து தங்களின் சந்ததிகளை பாதுகாக்க, நல்ல யோசனையாக நூற்றுக்கணக்கான நடுக்கல்களை குறிப்பு பதிவுடன் விட்டுச் சென்றிருக்கிறார்கள், அவை சுனாமி கற்கள் என்றே அழைக்கப்படுகிறது. அவர்களுடைய இந்த தொலைநோக்கு அறிவு, ஆச்சரியத்தையும் தங்கள் சந்ததியினர் மீது இருந்த அக்கறையையும் எடுத்துக்காட்டியுள்ளது. இந்த வாசிப்பு கற்கள், காடுகள் மற்றும் உயரமான மலைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லிலும் வெவ்வேறு விதமான செய்திகளும் உள்ளன. அவை சுனாமி, பூகம்ப எச்சரிக்கையை வெளிப்படுத்துவதாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.



