Breaking News

தம்பிகளா, ஒரு ஓரமா போய் விளையாடுங்கப்பா... சச்சின்-வார்னே தொடருக்கு ஐசிசி அனுமதி


சச்சின் டெண்டுல்கரும், ஷான் வார்னேவும் ஏற்பாடு செய்துள்ள டுவென்டி 20 தொடரை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. மூன்று போட்டிகளைக் கொண்டதாக இந்த தொடரை வார்னேவும், சச்சினும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். அமெரிக்காவில் இந்தப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான அனுமதியை ஐசிசியிடமிருந்து வாங்குவதில் சச்சின் பெரும் பங்காற்றியதாக கூறப்படுகிறது.