05 கஞ்சாச் செடிகளை வளர்த்தவர் கைது!
05 கஞ்சாச் செடிகளை வளர்த்தவர் கைது!
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர்ப்; பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் 05 கஞ்சாச் செடிகளை வளர்த்து வந்ததாகக் கூறப்படும் ஒருவரை நேற்று திங்கட்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டு கஞ்சாச் செடிகளை கண்டுபிடித்துள்ளதுடன், சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.