Breaking News

வெளியாகிய ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை கைப்பற்றியது வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை.

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் வின்சன்ட் மகளிர் உயர்தேசிய பாடசாலை மாணவி பத்மசுதன் தக்ஸிநியா 193 புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்றுள்ளார்.

கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலய மாணவன் ஜெகதீசன் சஜீதன் 190 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் - மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வவுணதீவு கரவெட்டி அரசினர் கலவன் தமிழ் பாடசாலையின் மாணவி சுதாகர் அஸ்வினி மற்றும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் முகம்மட் ஜவாஹிர் அகமட் முஷாரப் ஆகியோர் 189 புள்ளிகளைப் புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் மூன்றாவது இடத்தினைப்பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட ரெலிக்கொம் பரிவர்த்தன நிலையத்தின் பிராந்திய பணிப்பாளரான பத்மசுதனின் மகளான தக்ஸிநியா 193 புள்ளிகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
(நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர்)