Breaking News

இலங்கை சீனா உறவு மீண்டும் வலுவடையும் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச நம்பிக்கை.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையேயான உறவு மீண்டும் விருத்தியடையும் என பாராளுமன்ற உறுப்பினர்   மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சீனாவின் தேசிய தினத்தை குறித்து, வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையும் சீனாவும் சிறந்த நட்பு உறவைக் கொண்டுள்ள நாடுகள். இதன் அடிப்படையில், இலங்கையின் உயர்நீதிமன்ற கட்டட தொகுதி மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் என்பன சீன் அரசாங்கத்தினால் கட்டப்பட்டவை.

கடந்த 28 வருட காலப்பகுதியினில், சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்தமை கடந்த வருடத்தில் முதல் தடவையாக இடம்பெற்றது என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.