Breaking News

மட்டு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியப் பிரிவின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியப் பிரிவின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சிறுவர் பிரிவு வைத்தியர்களான டாக்டர் திருமதி.விஜி திருக்குமார்,திருமதி.அஞ்சலா அருட்பிரகாசம் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி உலக சிறுவர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்களான திருமதி.  கிரேஸ் நவரெத்தினராஜா,திருமதி .கலாரஞ்சினி ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு சிறுவர்,சிறுமிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது அதிதிகளினால் சிறுவர் கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய சிறுவர்,சிறுமிகளுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் டாக்டர்களான பிரபா சங்கர் ,கருநாகரன் ,போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக் உட்பட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பல்வேறு வைத்திய பிரிவுகளின் வைத்தியர்கள்,தாதியர்கள்,உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
-பழுலுல்லாஹ் பர்ஹான்-