Breaking News

ஞானசாரரை கைது செய்யும்படி கோட்டை நீதிவானால் பொலிஸாருக்கு உத்தரவு.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பிரச்சன்னமாகாமை தொடர்பில் பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு சற்றுமுன்னர் கோட்டை நீதிவானால் பொலிஸாருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் அமைப்பாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த அமைப்பு சிறுபான்மை மக்களுக்கு எதிராக தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை இன்று வரை மேற்கொண்டு வருகிறது.