Breaking News

பாதி மூளையைக் காணோம்.. ஷாக் ஆன டாக்டர்கள்!

பாதி மூளையைக் காணோம்.. ஷாக் ஆன டாக்டர்கள்!

பிரான்ஸ் நாட்டில் கால் வலி சிகிச்சைக்காக சென்ற நோயாளியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது மூளையின் ஒரு பகுதியைக் காணாததால் அதிர்ச்சி அடைந்தனர். கால் பலமில்லாமல் இருப்பதாகக் கூறி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் 44 வயது ஆண் ஒருவர். அப்போது அவரது உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவரது மூளை வழக்கத்திற்கு மாறாக சிறிய அளவில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இது மருத்துவர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அம்மனிதரின் மூளையை ஆராய்ச்சி செய்து வரும் மருத்துவர் லயனல் பியூலெட், ‘அந்த நோயாளியின் மொத்த மூளையும் சிறிதாக சுருங்கிக் காணப்படுகிறது. ஆனால், அதனால் அவரது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவத்தில் எந்தவித குறைப்பாடும் இருக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.