Breaking News

வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு‏.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  இன்று  மாலை நடைபெற்றது.

வோர் சைல்ட்  ஹொலன்ட்  நிதி உதவியுடன்  எஸ்கோ நிறுவனம் மண்முனை மேற்கு வவுணதீவு  பிரதேச செயலகத்துக்குட்பட்ட  13 உள்ள  விளையாட்டு கழகங்களுக்கு இவை வழங்கிவைக்கப்பட்டது .

கிராம மட்டத்தில் இயங்கி வருகின்ற சிறுவர் உரிமைகள் கண்காணிப்பு குழுக்களையும்  சிறுவர் சங்கங்களையும் இணைத்துக்கொண்டு சிறுவர் உரிமை பாதுகாப்பு , பங்களிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு சிறுவர்களையும் ,வளர்ந்தவர்களையும் வலுவூட்டி வரும் செயற்றிட்டத்தின் கீழ் இவை வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வு மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு  தலைமையில் இன்று மாலை பிரதேச செயலக  மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்  எஸ்கோ நிறுவன திட்ட இணைப்பாளர் எஸ் .செல்வா  நிறுவன திட்ட உத்தியோகத்தர்  எஸ்  சுதர்சன், மண்முனை மேற்கு  சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்  டி .பிரபாகரன் ,கள உத்தியோகத்தர்  திருமதி .கே .லூசியா  மற்றும்  விளையாட்டு கழக  சிறுவர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.
(நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர்)