டிசம்பரில் அசினுக்கு - திருமணம் - ஷாப்பிங்கில் மும்முரம்!
டிசம்பரில் அசினுக்கு - திருமணம் - ஷாப்பிங்கில் மும்முரம்!
டிசம்பர் மாதம் திருமணம் நடப்பதைத் தொடர்ந்து நடிகை அசின் நகைகள், உடைகளை தேர்வு செய்ய லண்டன் சென்றுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அசின் பாலிவுட் அறிமுகத்திற்குப் பிறகு கோலிவுட்டை மறந்து பாலிவுட் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இருப்பினும் அவர் நடிப்பில் வெளியான இந்திப் படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால் அங்கும் அவருக்கு வாய்ப்பு குறையத் தொடங்கியது.
ராகுலுடன் காதல்: இதற்கிடையில் அசின் தொழிலதிபர் ஒருவரைக் காதலிப்பதாக தகவல் வெளியானது. முதலில் இதுவெறும் வதந்தி என்று கூறப்பட்டாலும், கடந்த மாதம் அசினின் காதல் உறுதிப்படுத்தப்பட்டது.



