அடிப்படைவாதத்துக்கு இடமளியோம்
அடிப்படைவாதத்துக்கு இடமளியோம்
மத்திய கொழும்பின் பார்பர் வீதி எனப்படும் மகாவித்தியாலய வீதியின் 36ஆம் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து கோவிலின் பூஜைகள் மற்றும் தேர் திருவிழா எவ்வித தடையும் இன்றி நடைபெற வேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு ஆகும் என்று என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக் அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் இனி எந்தவித அடிப்படைவாதத்துக்கு இடம் கொடுக்க முடியாது. கடந்த காலத்தில் பொதுபல சேனா போன்ற அடிப்படைவாதிகள் இந்நாட்டின் பள்ளிவாசல்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, இஸ்லாமிய மக்களின் மத சுதந்திரத்துக்கு ஊறு விளைவித்ததை இந்நாடு கண்டது. அதற்கு எதிரான போராட்டத்தில் நாம் முதன்மை வகித்தோம். இன்று நாங்கள் பாடுபட்டு பெற்றுக்கொடுத்துள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இந்நாட்டு இந்து, இஸ்லாமிய, பௌத்த, கத்தோலிக்க மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த எவரையும் அனுமதிக்க முடியாது இந்த தோட்டத்து ஆலய பணிகளுக்கு எவரும் இடையூறு விளைவிக்க முடியாது. இதற்கு நான் ஒருபோதும் இடம் கொடுக்க போவதில்லை. நான் நேரடியாக இந்த பூஜை நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றேன். இந்த ஆலயத்துக்கு பூரண பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும். இந்த விவகாரத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனங்களுக்கு நான் ஏற்கெனவே கொண்டு வந்துளேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



