கொண்டையா விடுதலை...
கொண்டையா விடுதலை...
வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட துனேஷ் பிரியஷாந்த என்றழைக்கப்படும் கொண்டையாவை, விடுதலை செய்யுமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, கொண்டையாவின் சகோதரனான சமன் ஜயதிலக்கவை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



