பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் விசாரணை ஆணைக்குழுவின் முன் இன்று முன்னிலையாகிறார் மஹிந்த ராஜபக்ஷ.
பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதியின் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்லையில் விசாரணைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று முன்னிலையாகவுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விளம்பரங்களுக்கான 200 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தப்படவில்லை.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளது.
அவருக்கு மேலதிகமாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் அனுர சிரிவர்தன உள்ளிட்ட தற்போதைய நிர்வாக உறுப்பினர்கள் சிலரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 23ம் திகதி மரிஹானையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதியின் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் விசாரணைக்கு உள்ளாக்கப்படடிருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து முதல் தடவையாக வாக்குமூலம் பெறுற்றுகொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.



