Breaking News

ஐ.நா வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி நிதிகள் கிழக்கு முதலமைச்சரைச் சந்தித்தனர் - படங்கள் இணைப்பு

ஐ.நா வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி நிதிகள் கிழக்கு முதலமைச்சரைச் சந்தித்தனர் - படங்கள் இணைப்பு

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதி நிதி சப்னை நண்டி 
அவருடன் இணைந்த  உலக வங்கி பிரதிநிதி, ஐ.எல்.ஓ நாட்டுப்பிரதி நிதி, யுனிசெப்,  உலக உணவுத்திட்ட அதிகாரிகள் ஆகியோர் கொண்ட  இருபது பேர் அடங்கிய குழுவினர் நேற்று (05)  காலை 10 மணிக்கு கிழக்கு மாகாண சபைக்கு விஜயம் செய்தனர். 

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் கிழக்கு மாகாண கூட்டமண்டபத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பல முக்கிய விடையங்கள் பேசப்பட்டன.

இங்கு வருகை தந்திருந்தோரிடம் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பல கோரிக்கைகளை முன்வைத்தார்.

மீள்குடியேற்றங்கள் சம்மந்தமாக முதலமைச்சர்  கூறுகையில் சம்பூரில் இருந்து  வெளியேறிய மக்களை சரியான முறையில் அவர்களை அங்கு குடியேற்ற வேண்டும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன்

கிழக்கில் படித்து விட்டு தொழிலின்றி இருக்கும் இளைஞர்களின் விடையத்தில் அவசரமாகத் தலையிடவேண்டும். அவர்களுக்கு தொழில் வழங்குவதில் அவசரமாக முடிவுகள் எட்டப்படவேண்டும். மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக வறிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சென்று பெரும் துயரத்தைச் சம்பாதிக்கிறார்கள் அதனைத் தடுத்து அதற்கான தொழில் ஏற்பாடுகள் இங்கு செயற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்துடன், இளைஞர் யுவதிகளுக்கு பல துறைகளிலும் தொழிற்பயிற்சிகள் வழங்கவேண்டும்.
என்று முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அங்கு வருகை தந்திருந்த ஐ.நா தூதுக் குழுவினரிடம் எடுத்துக்கூறினார்.