தமிழில் தள்ளிப் போனது ருத்ரமாதேவி!
தமிழில் தள்ளிப் போனது ருத்ரமாதேவி!
அனுஷ்காவின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருத்ரமாதேவி படம் மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது. தெலுங்கில் 9 ம் தேதி வெளியாகும் இந்தப் படம் தமிழில் சற்று தாமதமாக 16 ம் தேதி வெளியாகிறது.
என்ன காரணம் என்று படக்குழுவினர் இது தொடர்பான எந்த அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை. தமிழில் தாமதமாக படம் வெளியாகிறது என்று மட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற மொழிகளில் 9 ம் தேதி வெளியாகிறதா அல்லது தமிழைப் போல தள்ளிப் போகிறதா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.



