கட்டாக்கில் நடந்த ரசிகர்களின் "பாட்டில் அட்டாக்"... ஜாலியா எடுத்துக்கனும்...
கட்டாக்கில் நடந்த ரசிகர்களின் "பாட்டில் அட்டாக்"... ஜாலியா எடுத்துக்கனும்...
கட்டாக் போட்டியின்போது ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசியது ஜாலியான விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேப்டன் டோணி கூறியுள்ளார். இதெல்லாம் சீரியஸான விஷயம் இல்லை. ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கவாஸ்கரைப் போல இல்லாமல், ரசிகர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் டோணி என்பது முக்கியமானது.