Breaking News

ஊடகவியலாளர் எக்னலிகொட காணமல் போனமை தொடர்பான வழக்கில் இராணுவத் தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பில் இராணுவத் தளபதிக்கும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானிக்கும் எதிர்வரும் 30ஆந் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) கட்டளை பிறப்பித்துள்ளது.

பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பில் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைக்காக இராணுவத் தளபதியும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானியும் சாட்சிகளாக அழைப்பதற்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சந்தியா எக்னலிகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட நகர்வுமனுவை பரிசீலனைக்கு எடுத்தபோதே மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விஜித மலலகொட இவ்வாறு கட்டளை பிறப்பித்தார்.
(லங்காதீப : தமிழாக்கம் எம்.ஐ.அப்துல் நஸார்)