Breaking News

நாடு முழுவதும் பசுமையான கரையோர வலயங்களாக மாற்றப்படும் எனும் தொனிப்பொருளில் தேசிய மரநடுகை தினம்‏.

கரையோரம் பேணல் மற்றும் கரையோரம் மூலவளத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் பசுமையான கரையோர வலயங்களாக மாற்றப்படும் எனும் தொனிப்பொருளில் தேசிய மரநடுகை தினம்‏ கல்லடிப்பாலத்தின்  ஆற்றங்கரை அருகிலும், பாலமீன்மடு பகுதியிலும்  நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், கரையோரவள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா,  மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார்  உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

தேசிய நிகழ்வாக நடைபெற்ற நிகழ்வின் ஆரம்ப நிகழ்வினைத்தொடர்ந்து கல்லடிப்பாலம் பகுதியை அழகுபடுத்தும் வகையில் மரநடுகை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
(நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர்)