Breaking News

அமெரிக்கா, ஐரோப்பாவிலும் விரைவில் தாக்குதல் நடத்துவோம்; ஐஎஸ் மிரட்டல்


சிரியாவில் தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு பிரான்ஸின் கதி தான் ஏற்படும் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் வாஷிங்டனில் தாக்குதல் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தீவிரவாதிகள் கூறியிருப்பதாவது,

எங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு பிரான்ஸுக்கு ஏற்பட்ட நிலை தான். எப்படி பிரான்ஸின் மையமான பாரீஸில் தாக்குதல் நடத்தினோமோ அதே போன்று அமெரிக்காவின் மையமான வாஷிங்டனை தாக்குவோம். மேலும் ஐரோப்பாவையும் தாக்குவோம் என்று தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ ஈராக்கில் உள்ள சலாஹுத்தான் மாகாணத்தில் எடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை அழிக்காமல் ஓயப் போவது இல்லை என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.