நிஷாவைக் கரம்பிடிக்கும் கணேஷ் வெங்கட்ராம்...
நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தனது திருமணத்திற்கான பணிகளில் தற்போது மும்முரமாக இறங்கி இருக்கிறார். அபியும் நானும் படத்தில் அறிமுகமான கணேஷ் வெங்கட்ராம் தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
சமீபத்தில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் கணேஷ் வெங்கட்ராமிற்கு சொல்லிக்கொள்ளும் படமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் தனது திருமணம் தொடர்பான பணிகளில் தற்போது தீவிரம் காட்டிவருகிறார் கணேஷ் வெங்கட்ராம்.



