மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் அறிவித்தல் பலகைகளுக்கு சேதம் - படங்கள்
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அறிவித்தல் பலகைகள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றதுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
அன்னதான மண்டபம், ஆலயத்தின் முன்புறம் மற்றும் ஆலய வளாகப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த அறிவித்தல் பலகைகளே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.
ஆலய வளாகத்தில் பக்தர்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டிய விடயங்கள் மற்றும் பாதுகாக்கப்படவேண்டிய பகுதிகள் தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட அறிவித்தல் பலகைகளே இவ்வாறு உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.