சோஷியல் மீடியாவில் வைரசாகும் இந்தியா-பாகிஸ்தான் நன்பர்கள்
இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த இரு நண்பர்கள், துபாயில் தங்களது ஒற்றுமையை வலியுறுத்தி எடுத்த புகைப்படம், உலகம் எங்கும் வைரலாக பரவி வருகிறது. அந்த படத்தில், இரு வாலிபர்கள் தங்கள் கையில் இறு பேப்பர் துண்டுகளை வைத்துள்ளனர். அதில் இந்திய முக ஜாடை கொண்ட ஒருவர் தனது கையில், "நான் ஒரு இந்தியன், நான் துபாயிலுள்ளேன். நான் பாகிஸ்தான் நாட்டினரை வெறுப்பதில்லை. இவர் எனது சிறந்த நண்பர். என்னை போன்றே பலர் உள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
அருகில் உள்ளவர் வைத்துள்ள பேப்பரில், "நான் ஒரு பாகிஸ்தானியன், நான் துபாயிலுள்ளேன். நான் இந்திய நாட்டினரை வெறுப்பதில்லை. இவர் எனது சிறந்த நண்பர். என்னை போன்றே பலர் உள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது. நட்பை, நாடுகளை கொண்டு வரையறுக்கவோ, தடுக்கவோ முடியாது என்பதை காட்டுகிறது



