Breaking News

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமான கந்த சஸ்டி விரதம்.

முருகன்பெருமானை நோக்கி அனுஸ்டிக்கப்படும் இந்த கந்த சஸ்டி விரதமானது ஆறு தினங்கள் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

சூரபத்மனை வதம் செய்து தேவர்களை காத்தருள் செய்த தினத்தில் இந்துக்கள் கந்த சஸ்டி விரதத்தினை அனுஸ்டிக்கின்றனர்.

இன்று இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள இந்து ஆலயங்களில் கந்த சஸ்டி விரதம் சிறப்பாக ஆரம்பமானது.

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று கந்த சஸ்டி  விசேட விரதம்   பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமானது.

இன்று பிற்பகல் முருகப்பெருமானுக்கு விசேட அபிசேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றதுடன் கந்த சஸ்டி விரதத்தினை அனுஸ்டிக்கும் அடியார்களுக்கு தெற்பை அணிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து  வசந்த மண்டபத்தில் வள்ளி தேவசேனா சமேதராக எழுந்தருளியுள்ள சிவசுப்ரமணியருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.

இந்த விரத பூஜை நிகழ்வுகளில்  பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான  அடியார்கள் கலந்துகொண்டனர்.