பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபாவை நஷ்ட ஈடாக கோரும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச.
எவன்காட் சம்பவம் தொடர்பில் தமக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபாவை நஷ்ட ஈடாக கோரி வழக்கு தொடரவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எவன்காட் சம்பவம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிட்டு தமது பெயருக்கு கலங்கத்தையும் அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காகவே இந்த வழக்கு தொடரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.




