Breaking News

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று நாடளவிய ரீதியாக வாக்கெடுப்புகள் இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் – ஸ்ரீ லங்கா இளைஞர் கழக சம்மேளனம் – தேசிய கொள்கை திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் 2015 - 2016 ஆண்டுக்கான  மூன்றாவது இளைஞர் பாராளுமன்ற வாக்கெடுப்புக்கள் இன்று  நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது.

நடாளாவிய ரீதீயில் சுமார் மூன்றரை இலட்சம் பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள நிலையில்  அனைத்து மாவட்டங்களிலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு 334 வாக்களிப்பு நிலையங்களில்  வாக்களிப்பு இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களை தெரிவு செய்ய 32 வேட்பாளர்கள் போட்டியிட்டதோடு  மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 18607 இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுந்தனர்.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஒருவரை  தெரிவு செய்ய  12 வேட்பாளர்கள் போட்டியிட்டதோடு     மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில்  6817 இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுந்தனர்.

இதன் அடிப்படையில்  வவுணதீவு ,ஆரையம்பதி ,காத்தன்குடி ஏறாவூர், மண்முனை வடக்கு  ஆகிய 05 தேர்தல் தொகுதியில்  இருந்து 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மண்முனை வடக்கு பிரதேச செயலக தேர்தல்  தொகுதியில்  இருந்து ஒருவரை தெரிவு செய்ய 03 வேட்பாளர்கள் போட்டியிட்டதோடு  மண்முனை வடக்கு தேர்தல்  தொகுதியில் 2122  இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுந்தனர்.

இந்த  தொகுதிக்கான வாக்களிப்பு நிலையம்   மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் அமைக்கப்பட்டு வாக்களிப்புகள்  இடம்பெற்றது.

இதன் போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  வி .தவராசா , உதவி பிரதேச செயலாளர் எஸ் . யோகராஜா , பிரதேச செயலக உத்தியோகத்தர் டி .ரவிராஜ் , மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்  திருமதி .நிசாந்தி அருள்மொழி ,மண்முனை வடக்கு பிரதேச செயலக இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் திருமதி.பிரசாந்தி பிரியதர்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.