Breaking News

ஜனாதிபதி மாளிகையில் நிலத்தடி பதுங்கு குழி இருந்தது பற்றி முன்னொரு போதும் நான் அறிந்திருக்கவில்லை சரத்பொன்சேனா.

ஜனாதிபதி மாளிகையினுள் நிலத்தடி பதுங்கு குழியொன்று இருப்பது பற்றியோ, அங்கே பாதுகாப்பு சபைக் கூட்டங்கள் இடம்பெற்றதாகவோம் தாம் அறிந்திருக்கவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

காலி மீபாவல பிரதேசத்தில் நடைபெற்ற செயற்திட்ட குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

தாம் எந்தவொரு தருணத்திலும் நிலத்தடி பதுங்கு குழியில் இடம்பெற்ற பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் பங்குகொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவிய காலத்தில் இந்த பதுங்கு குழியை உருவாக்கியதாக நேற்று முன்தினம் மாத்தறை - ஹக்மனவில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.