தாய்லாந்தில் ஜனாதிபதிக்கு அதியுயர் இராணுவ மரியாதையுடன் அமோக வரவேற்பு தாய்லாந்தின் பிரதமர் வாழ்த்து.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நான்கு நாள் பிரயாணமாக தாய்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேன்று முற்பகல் தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரையூட் சான் ஓ சாவை (Prayut Chan O Cha) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி அவர்கள் பிரையூட் சான் ஓ சாவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு சென்றபோது பிரையூட் சான் ஓ சா அவர்கள் நேரடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்ததாக அறியமுடிகிறது.
இதனை தொடர்ந்து தாய்லாந்து இராணுவத்தினரின் இராணுவ மரியாதையும் இலங்கையின் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
இதனையடுத்து இரண்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். இதன்போது உரையாற்றிய தாய்லாந்தின் பிரதமர், வெகுவிரைவில் தாய்லாந்தின் முதலீட்டாளர்களை கொண்ட குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்தார்.










